சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரியவில்சன் நிதிநிலை அறிக்கையை வாசித்தார் 
தமிழ் நாடு

அரசுப் பள்ளிகளில் சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ் திட்டம்!

Staff Writer

அரசுப் பள்ளிகளில் தூய்மையான, பாதுகாப்பான கற்றல் சூழலை உறுதிப்படுத்த 'சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ்' திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் மரியவில்சன் தெரிவித்துள்ளார்.

1) தினசரி தூய்மைப் பணிகள்,

2) குடிநீர் வசதிகள்,

3) கழிப்பறைகள் பராமரிப்பு,

4) பள்ளி வளாகங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு வசதி ஆகியவற்றை உறுதிப்படுத்துவதன் மூலமாக சூப்பர் சேஃப்டி, சூப்பர் மாணவர், சூப்பர் கேம்பஸ் உருவாகும் என்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம், முதற்கட்டமாக 10,000 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.

இதற்காக இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ. 139 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram