மீன்பிடிப் படகுகள் 
தமிழ் நாடு

மீன்பிடித் தடைக் காலம் நாளைமறுநாள் தொடங்குகிறது!

Staff Writer

தமிழ்நாட்டில் மீன்கள் இனப் பெருக்கத்துக்காக மீன்பிடிக்குத் தடை விதிக்கும் காலம் வரும் 15ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 61 நாள்கள் நீடிக்கும் இந்தத் தடை காலத்தில் விசைப்படகில் மீன்பிடிக்கக் கூடாது. 

மீன் பிடிக்க விதிக்கப்படும் வருடாந்திரத் தடை காரணமாக, வழக்கம்போல மீன்களின் விலை அதிகரிக்கும். 

இதுதொடர்பாக மீன்வளத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், மீன்பிடிக்க கடலுக்குள் சென்றவர்கள் நாளை நள்ளிரவுக்குள் கரைதிரும்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.