தீபாவளி பலகாரங்கள் 
தமிழ் நாடு

தீபாவளிப் பலகாரம் வாங்கப்போறீங்களா? இதெல்லாம் தெரிஞ்சுக்கங்க!

Staff Writer

தீபாவளிப் பண்டிகைக்காக கடைகளில் வாங்கும் உணவுப் பொருட்களில் குறைபாடுகள் இருந்தால் உடனடியாக புகாரளிக்க வேண்டும் என்று தமிழக உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

அதேபோல, தீபாவளிப் பண்டிகைக்கான பலகாரங்களைத் தயாரித்து விற்கும் வணிகர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.

உணவு வணிகர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டியவை:

1) சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட உணவு வண்ணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்: அதிகப்படியான வண்ணங்களைத் தவிர்க்கவும்.

2) உணவுப் பொருட்களை ஈக்கள், பூச்சிகள், கிருமித்தொற்று இல்லாத சுகாதாரமான முறையில் விற்பனை செய்ய வேண்டும்.

3) இனிப்புகள் கொண்ட பெட்டிகளை விற்பனை செய்யும் வணிகா்கள் அந்த பெட்டியில், இனிப்புகள் தயாரிக்கப்பட்ட தேதி, உண்ணத் தகுந்த காலம் ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

தீபாவளிப் பண்டிகைக்கு பலகாரம் வாங்கும் முன் பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை:

1) பேக்கிங் செய்யப்பட்ட தின்பண்டங்களில், தயாரிக்கப்பட்ட தேதி, உண்ணத் தகுந்த காலம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

2) உணவுப் பொருட்களின் தரம், குறைபாடுகள் குறித்துப் புகார் தெரிவிக்க:

வாட்ஸ்அப் புகார் எண்: 94440 42322

இணையதளம்: foodsafety.tn.gov.in

செயலி: TN Food Safety Consumer App

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram