வனத் துறை அமைச்சர் ரஞ்சித் 
தமிழ் நாடு

வனத்துறை பணியாளர்களுக்கு இலவசப் பேருந்து அட்டை!

Staff Writer

சட்டப்பேரவையில் இன்று வனத் துறைக்கான அறிவிப்புகளை அமைச்சர் ரா.வீ. ரஞ்சித் வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட அறிவிப்புகளின் விவரம்:

1) வனத்துறையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 1,947 சீருடைப் பணியாளர்களுக்கு ரூ. 12 கோடி செலவில் அறிமுகப் பயிற்சி அளிக்கப்படும்.

2) அரசு, உள்ளாட்சி அமைப்புகள், பிற நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்களில் 25 இயற்கைப் பூங்காக்கள் ரூ. 10 கோடி செலவில் அமைக்கப்படும்.

3) 43 இயற்கை ஆர்வலர் பயிற்சியாளர்கள் உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான இன வரைவியல் கணக்கெடுப்பு, மதிப்பீடு, கண்காணிப்பு, விழிப்புணர்வுப் பணிகள் ஆகியவற்றில் ரூ. 4.2 கோடி செலவில் ஈடுபடவுள்ளனர்.

4) தென்மாவட்டங்களில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் நடமாடும் வனஉயிரின தடவியல், நோய் கண்டறியும் ஆய்வகம் செயல்படுத்தப்படும்.

5) மனித வனவிலங்கு மோதல், வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்படும்.

6) வனத்துறையில் பணிபுரியும் 6,260 சீருடைப் பணியாளர்களுக்கு ரூ. 1.50 கோடியில் இலவசப் பேருந்து அட்டை, ஸ்மார்ட் அடையாள அட்டையாக வழங்கப்படும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram