தமிழ் நாடு

விஜயகாந்த், விஜய் கட்சிகளில் விருப்ப மனு, தள்ளுமுள்ளு!

Staff Writer

விஜயகாந்த் நிறுவிய தே.மு.தி.க.விலும் விஜய் தலைமையிலான த.வெ.க.விலும் சட்டப்பேரவையில் போட்டியிட விரும்புவோருக்கான மனு வழங்கல் இன்று தொடங்கியது.

சென்னை, கோயம்பேட்டில் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு வழங்கலைத் தொடங்கிவைத்தார். முன்னதாக, மனுக்களை அவரின் கணவரும் கட்சியின் நிறுவனருமான விஜயகாந்தின் சமாதியில் வைத்து ஆசி பெற்றுக்கொண்டார்.

விஜய்யின் த.வெ.க. தலைமை அலுவலகம் அமைந்துள்ள சென்னையை அடுத்த பனையூரில் காலை முதலே கார்களில் அக்கட்சி நிர்வாகிகள் படையெடுத்ததைப் போல அங்கு குவிந்தனர். காலை 10.30 மணியளவில் தொடங்கிய விருப்ப மனு வழங்கல், இரண்டரை மணி நேரத்தில் முடிவடைந்தது. முதல் மனுவை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வாங்கினார். இரண்டரை மணி நேரத்தில் 50 ஆயிரம் மனுக்கள் வழங்கி, மொத்தமும் தீர்ந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு ஒரே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.