திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்.டி.பி.ஐ. ஆகிய நான்கு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும்கட்சியான திமுக 26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளது.
இதில் காங்கிரஸ் -28, தே.மு.தி.க.-10. விடு தலை சிறுத்தைகள்-8, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-5, இந்திய கம்யூனிஸ்டு-5. ம.தி.மு.க.- 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- 2, மனிதநேய மக்கள் கட்சி-2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-2 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த நிலையில், நேற்று மாலை முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்.டி.பி.ஐ. ஆகிய நான்கு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்சிகள் அனைத்தும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.