தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை நவம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “ரூ. 180 கோடி மதிப்பீட்டில் சமுதாய நலக்கூட கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. முக்கியமாக வடசென்னை பகுதிகளில் 11 சமுதாய நலக்கூட கட்டிட பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. விரைவில் திறந்து வைக்கப்படும்.
தூய்மை பணியாளர்களுக்கு வருகிற 15ஆம் தேதி உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். இது தூய்மை பணியாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த முறையை விட இந்த முறை மழை குறைவாகவே பெய்துள்ளது. மாநகராட்சி சார்பில் ஆகஸ்ட் மாதம் முதலே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மழை வரக்கூடிய சூழலை பார்த்துக்கொண்ட பின் தான் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.