ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவச குளிர்பதனப்பெட்டி வழங்கப்படும் என அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலையில் வெளியிட துணைப் பொதுச்செயலாளர் முனுசாமி பெற்றுக்கொண்டார்.
அதில், மொத்தம் 297 வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
முன்னதாக, மூன்று கட்டங்களாக அ.தி.மு.க. வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.