மனு ஒத்திவைப்பு 
தமிழ் நாடு

ஜெம் வீரமணி வழக்கு - சாந்தி, மகேந்திர சிம்ஹன் பெயில் மனு ஒத்திவைப்பு!

Staff Writer

ஜெம் வீரமணிக்கு உடந்தையாக இருந்த சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் கோரிய பெயில் மனு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஜெம் வீரமணிக்கு உடந்தையாக இருந்த சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் கடந்த 28ஆம் தேதி, மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் பெயில் வழங்குமாறு சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோர் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழிக்க ஜெம் வீரமணியிடம் இருந்து சாந்தி ரூ. 24.63 லட்சம் பெற்றதாகவும், இவர்கள் இருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களை தடவியல் ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாகவும் காவல் துறை குறிப்பிட்டது.

மேலும், இவர்கள் வெளியில் வந்தால், சாட்சிகளை கலைக்கவும், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோரை அச்சுறுத்த வாய்ப்புள்ளதால், இவர்கள் இருவருக்கும் பெயில் வழங்கக்கூடாது என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டார். பின்னர், தேதி குறிப்பிடாமல் பெயில் மனுவை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram