தமிழ்நாடு அரசின் 4ஆம் தொகுதிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் 291 கிராம நிர்வாக அலுவலர், 3,798 இளநிலை உதவியாளர், 107 வரி வசூலிப்பவர், 97 வரி தண்டலர், 1,572 தட்டச்சர், 404 சுருக்கெழுத்து தட்டச்சர், 60 நேர்முக எழுத்தர், 40 வனக்காவலர், முதுநிலை ஆய்வக உதவியாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் போன்ற 46 பணியிடங்களுக்கான அறிவிப்பை நேற்று டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.
தேர்வு எழுத விரும்புபவர்கள் அடுத்த மாதம் 5ஆம் தேதிக்குள் www.tnpcexams.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இந்த தேர்வு, வரும் 2027ஆம் ஆண்டு, ஜனவரி 10ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 5,307 பணியிடங்களுக்கு 13.89 இலட்சம் பேர் விண்ணப்பித்து, 11.48 இலட்சம் பேர் தேர்வு எழுதினர். நடப்பு ஆண்டில் 6,574 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.