தமிழ் நாடு

ஜி.எஸ்.டி. வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும்! - திருமா

Staff Writer

மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை திரும்ப பெற வேண்டும் என்று வி.சி.க. எம்.பி. தொல்.திருமாவளவன் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

மக்களவையில் இடைக்கால நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழக எம்.பி.கள், மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் மத்திய அரசு ஒரு ஓரவஞ்சனை காட்டுவதாக வி.சி.க. எம்.பி. தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மக்களவையில் நேற்று பேசியதாவது, “மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை திரும்பப் பெற்றுக் கொண்டு, மாநில அரசுகளுடன் கலந்து பேசி மாற்று வகையிலான வரிவிதிப்பு முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.

16ஆவது நிதிக்குழுவில் மாநில அரசுகளுக்கு நேர்மையான முறையில் நிதியை பகிர்ந்து அளிக்க வேண்டும். குறிப்பாக மாநில அரசுகள் தங்களின் தற்சார்பை இழந்திருக்கும் நிலையில், 75% வரி வருவாயில் நிதியை பகிர்ந்து அளிப்பதுக்கு ஏற்ற வகையில் அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்” என்று தொல்.திருமாவளவன் பேசினார்.