சென்னை உயர்நீதிமன்றம்  
தமிழ் நாடு

பதவிவிலகிய எம்.எல்.ஏ.களின் மறுபோட்டி- எதிர்த்த வழக்கு தள்ளுபடி

Staff Writer

பதவிவிலகிய எம்.எல்.ஏ.கள் மீண்டும் போட்டியிடுவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

அரசியல் காரணங்களுக்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிவிட்டு அதே தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்நிலையில், இப்படியானவர்கள் மீண்டும் போட்டியிடத் தடை விதிப்பது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டுவர உத்தரவிடக் கோரியும், மீண்டும் போட்டியிடும் அந்த எம்.எல்.ஏ.களிடம் தேர்தல் செலவை வசூலிக்கக் கோரியும் மனுக்கள் வழக்கு தொடுக்கப்பட்டது.

மேலும், அவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கவும் கோரியதை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் மட்டுமே இதில் சட்டத்தை இயற்ற முடியும் என்று நீதிமன்றம் கூறிவிட்டது.