கனமழை எச்சரிக்கை 
தமிழ் நாடு

மேலும் 6 நாள்களுக்கு தீவிர மழைப்பொழிவு!

Staff Writer

தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோரப் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சென்னை உட்பட்ட வடதமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்துவருகிறது.

இந்நிலையில், இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு பகுதியில் நகரக்கூடும் என்பதால், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்னும் 6 நாள்களுக்கு தமிழகம் முழுவதும் தீவிர மழைப்பொழிவு இருக்கும் என்றும் வானிலை மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram