மழை (மாதிரிப்படம்) 
தமிழ் நாடு

வடமாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை!

Staff Writer

சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தில் இன்று(ஜன. 25) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வானிலை நிலவரங்களை அவ்வபோது சமூக ஊடகங்களில் பதிவிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது:

டெல்டா மாவட்டங்கள் முதல் சென்னை(சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு) வரையிலான வடதமிழகம் முழுவதும் இன்று மழை பெய்ய சிறந்த நாள். உள் மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யும்.

டெல்டா முதல் சென்னை வரை நேற்று(ஜன. 24) லேசானது முதல் மிதமான மழை பெய்தது. தமிழகம் முழுவதும் எங்கும் கனமழை பெய்ததாகத் தகவல் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகம் -இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் பலத்த மழை பெய்யக்கூடும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.