தமிழ் நாடு

10 மாவட்டங்களில் இன்று கன மழை!

Staff Writer

தமிழகத்தில் பத்து மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உண்டு என வானிலை மையம் அறிவித்துள்ளது. 

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்பு உண்டு என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.