சென்னை உயர்நீதிமன்றம்  
தமிழ் நாடு

நீதிமன்ற சுதந்திர தின விழாவில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை!

Staff Writer

உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதித்துறை அமைப்புகளில் நாளை சுதந்திர நாள் நிகழ்ச்சிகளில் அண்மையில் தமிழக அரசின் உத்தரவை மீறி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாது என்பது உறுதியாகியுள்ளது. 

உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் இதற்கான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வந்தே மாதரம் பாடலையும் அதைத் தொடர்ந்து தேசிய கீதத்தையும் பாடவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் சுற்றறிக்கை

இந்த உத்தரவுக்கு எதிராக மாநில அளவில் வழக்கறிஞர்கள் எதிர்ப்பும் அதிருப்தியும் தெரிவித்து வருகின்றனர். 

உயர்நீதிமன்றத்தின் புதிய 15 நீதிபதிகள் பதவியேற்பு விழாவில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. 

அதைத் தொடர்ந்து இப்படியொரு சுற்றறிக்கை வந்திருக்கிறது.