முதல்வர் விஜய் 
தமிழ் நாடு

கரூர் - ரத்தானது அரசுப் பணி நியமன ஆணை!

Staff Writer

கரூர் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு கொடுத்த பணி நியமன அரசாணையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்துள்ளது.

கடந்த 2025 செப்டம்பர் 27ஆம் தேதி, விஜய் கரூருக்குப் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியாகினர்.

பலியானவர்களின் குடும்பங்களுக்கு கடந்த தி.மு.க. ஆட்சியில் அரசுத் தரப்பிலும், த.வெ.க. தரப்பிலும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

முதல்வர் ஆனபின்னர் விஜய், கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்ப உறுப்பினர்களுக்கு, கடந்த ஜூலை 10ஆம் தேதி அரசுப் பணிக்கான நியமண ஆணையை வழங்கினார்.

கட்சி நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்கு அரசுப் பணி வழங்கியதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது.

அதில் இன்று நடைபெற்ற விசாரணையில், பணி நியமனம் அரசமைப்பு விதிகளுக்கு மாறானது என நீதிபதிகள் ரத்துசெய்தனர்.

"அரசுத் தரப்பில் சாதரண பணி வழங்குவதாகக் கூறுவதை ஏற்க முடியாது. எந்தப் பணியும் சாதரண பணி அல்ல. பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு திறன் வளர் பயிற்சி வழங்கி உதவலாமே? அரசுப் பேருந்து விபத்தில் உயிரிழப்பவர்கள், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழப்பவர்களின் குடும்பங்கள் அரசுப் பணி கோரினால், அரசால் பணி வழங்க இயலுமா?" என்று அரசுத் தரப்பிடம் நீதிமன்றம் கேள்விகளை முன்வைத்தது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram