பள்ளிகளுக்கு விடுமுறை (மாதிரிப்படம்)
தமிழ் நாடு

புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

Staff Writer

கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை ஒருநாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு பெங்கல் என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வடகடலோர மாவட்டத்தை நோக்கி மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் பெங்கல் புயல் நகர்வதால் நான்கு நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரி, காரைக்காலில் நாளை (27-11-2024) ஒருநாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.