தலைமைச்செயலகம் 
தமிழ் நாடு

சென்னை கமிஷனர்... அடுத்து உள்துறைச் செயலாளரும் மாற்றம்!

Staff Writer

சென்னை போலீஸ் ஆணையரைத் தொடர்ந்து, மாநிலத்தின் உள்துறைச் செயலாளரையும் மாற்றச் செய்திருக்கிறது தலைமைத் தேர்தல் ஆணையம்.  

த.வெ.க. தலைவர் விஜய் தரப்பில் சென்னை, போலீஸ் ஆணையர் அருணை மாற்றவேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அவருடைய பதவியைப் பயன்படுத்தி ஆளும் கட்சி விஜய்யின் பிரச்சாரத்தை முடக்குவதாக அக்கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜூனா பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

அதைத் தொடர்ந்து தலைமைச்செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டார். அதையடுத்து சென்னை போலீஸ் ஆணையர் அருணை மாற்றிவிட்டு, அபின் தினேஷ் மோடக்கை நியமிக்க உத்தரவிட்டது. அவரும் நேற்று மாலையே பொறுப்பேற்றுக்கொண்டார்.

இன்று முற்பகலில் மாநில உள்துறைச் செயலாளர் தீரஜ்குமாரையும் மாற்ற தேர்தல் ஆணையம் வழிகாட்டல் அனுப்பியுள்ளது. அவருக்குப் பதிலாக மணிவாசன் நியமிக்கப்படுகிறார்.

இதற்கான கடிதத்தை ஆணையத்தின் செயலாளர் லதா திரிபாதி, தலைமைச்செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளார்.