செந்தில் பாலாஜி 
தமிழ் நாடு

குதிரை பேரம்... யூட்டியூபர், செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் கைது!

Staff Writer

த.வெ.க ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரமாகவே, முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க தி.மு.க. தரப்பில் முயற்சி நடப்பதாக தகவல்கள் வெளியாகிவந்தன. இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரும் அடிபட்டது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் முதலில் ஒரு கும்பல் அணுகியுள்ளது.

அவர் த.வெ.க.விலிருந்து கட்சி மாறுவதற்கு பேரம் பேசியதாக சென்னையில் வசித்துவரும் யூட்டியூபர் ஐடிபிஎஸ் திருநாவுக்கரசு என்பவர் நேற்றுஅதிகாலை 2 மணி அளவில் கைதுசெய்யப்பட்டார்.

அவர் அளித்த தகவலின்படி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்களான கரூர் மெஸ் கார்த்திக், ரமேஷ் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு, ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.