திமுக உடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை முடிந்த பிறகு பேட்டி அளித்த ஐ.யு.எம்.எல். தலைவர் காதர் மொய்தீன் "திமுகவிடம் 5 தொகுதிகள் ஒதுக்கக் கேட்டுள்ளோம். குறைந்தபட்சம் 4 தொகுதிகள் ஒதுக்க வலியுறுத்தியுள்ளோம்" என்று கூறியுள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை இன்று தேதி தொடங்கியது.
தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்காக திமுகவில் டிஆர் பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ். பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
திமுக கூட்டணியில் தொடர்ந்து இடம் பெற்று வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைத்துள்ள குழுவுடன் இன்று திமுக குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக குழுவை முஸ்லிம் லீக்கின் தலைவர் காதர் மொகிதீன், நவாஸ் கனி, அப்துல் ரகுமான், அபூபக்கர், ஷாஜஹான் ஆகியோர் அடங்கிய குழு தற்போது சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த காதர் மொய்தீன் நாங்கள் 5 தொகுதிகள் கேட்டோம். அவர்கள் 4 தொகுதிகள் தருவதாக கூறியிருக்கிறார்கள். 5 தொகுதிகள் வழங்க பரிசீலனை செய்யுங்கள் என கூறியிருக்கிறோம்.
2021இல் முஸ்லிம் லீக் கட்சி 3 தொகுதிகளில் போட்டிட்டு தோல்வியைத் தழுவியது உண்மைதான். ஆனால், இப்போது நாங்கள் 5 தொகுதிகள் கேட்டோம். சரி 4 தொகுதிகளாவது கொடுங்கள் என சொல்லியிருக்கிறோம். 2 தொகுதிகள் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போதைய 2026 தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை முஸ்லிம் லீக் கேட்கிறது. திமுக தரப்பில் அதிகபட்சமாக 2 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்புள்ளது. எங்களுக்கு மட்டுமில்லை. எல்லா கட்சிகளுக்கும் இதையேதான் சொல்லியிருக்கிறார்கள்.
இன்றைக்கு நடந்த பேச்சுவார்த்தை நல்லபடியாகவே நடந்தது. நாங்கள் எப்போதும் போல் கூட்டணியில் தொடருவோம். சீட்டு பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
11 கட்சிகளுக்கும் இடம் கொடுக்க வேண்டி இருப்பதால் கூட்டணி கட்சிகளை தொகுதிகளை தானம் செய்ய சொல்லி கேட்டிருக்கிறார்கள். நாங்கள் வழக்கம் போல் ஏணி சின்னத்தில் போட்டியிடுவோம்.” என்றார்.