திருச்செந்தூர் 
தமிழ் நாடு

அர்ச்சகர் விவகாரம்- அனிதாவுக்கு அமைச்சர் ரமேஷ் சூடான கேள்வி!

Staff Writer

திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர் விவகாரத்தில் சாதிரீதியாகப் பிரச்னையைத் திருப்புவதாக தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா இராதாகிருஷ்ணன் மீது அமைச்சர் இரமேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார். 

“மாண்புமிகு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்களே (உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரைப் பின்பற்றுவர்களுக்கு கிடையாது) மக்களைச் சுரண்டிப் பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.

பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை. நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியைச் சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாகப் பேசுகிறீர்கள்.

தவறு செய்தவர்களைத் தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை. இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்துவருவதை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்!” என்று அமைச்சர் இரமேஷ் தன் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.