மதுரை திருப்பரங்குன்றம் கோயில் 
தமிழ் நாடு

கோயில்களில் இலஞ்சம் வாங்கினால் சொல்லுங்கள்- வழிசொன்ன அமைச்சர் ரமேஷ்

Staff Writer

தமிழகத்தில் உள்ள கோயில்களில் முறைகேடாக யாரும் பணம் வாங்கினால் புகார் அளிக்குமாறு இந்து சமயத் துறை அமைச்சர் ரமேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்:

“தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள், திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களைப் பற்றி, கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு தகுந்த விளக்கம், ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள்.

நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்தப் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளைச் செய்வோம்.

மின்னஞ்சல் முகவரி : minister_hrce@tn.gov.in ” என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.