இயக்குநர் ஷங்கர் சிறை திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு, எல்.கே. அக்ஷய் குமார் நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் சிறை.
காதல் கதைக்குப் பின் காவல்துறை அதிகார பின்னணியை மையமாக வைத்து கதை சொல்லப்பட்டுள்ளது. இந்தாண்டின் இறுதி வெளியீடாக டிச.25 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால், இப்படம், இதுவரை ரூ. 7 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சிறை திரைப்படத்தைப் பார்த்த இயக்குநர் ஷங்கர், “சிறை ஒரு சிறந்த திரைப்படம். பல காட்சிகளில் கண்ணீர் சிந்தினேன். நடிகர் விக்ரம் பிரபுவின் அழுத்தமான நடிப்பும் நடிகர்கள் அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் கதாபாத்திரங்களின் வெகுளித்தனமான உணர்வுப்பூர்வ நடிப்பு அழகாக படம் முடிந்த பின்பும் மனதிலேயே தங்குகிறது.
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி தன் முதல் படத்திலேயே நம் மனங்களைச் சிறைபடுத்திவிட்டார். இப்படத்தைத் தயாரித்த லலித் குமாருக்கு வாழ்த்துகள். தமிழ் சினிமா இந்தாண்டின் இறுதியில் முக்கியமான படத்துடன் நிறைவடைகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.