“என் இளமைப் பருவத்தையெல்லால் காங்கிரஸ் கட்சிக்காகச் செலவு செய்தேன்.” என்று விளவங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ”மாநில அளவில் செயற்குழு உறுப்பினரா இருக்கேன். இதுவே முக்கியமான பொறுப்புதான். மாவட்டத்தில் நடக்கிற கட்சிப் பணிகள் குறித்து விவாதிக்கிறாங்க. தவிர எந்தவொரு முக்கிய முடிவுன்னாலும் கருத்து கேக்கறாங்க. இதுக்கு மேல என்ன செய்யணும்?
23 வருஷம், அதாவது என் இளமைப் பருவத்தையெல்லால் காங்கிரஸ் கட்சிக்காகச் செலவு செய்தேன். அதுக்குப் பிறகுதன் அங்கீகாரம் தந்தாங்க. ஆனாலும் தொடர்ந்து மக்கள் பணி செய்யணும்னு நான் நினைச்சப்ப இடையூறு தந்தாங்க. அதனாலேயே ஒருகட்டத்தில் கட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டேன். ஆனா அப்படி வெளியேறிய பிறகும் எம்.பி. தேர்தல் சீட்டுக்கு ஆசைப்பட்டுதான் கட்சி மாறினதா வதந்தி பரப்பினாங்க. அது உண்மையில்லை. இங்க வந்து 23 மாதங்கள்தானே ஆகுது. ஆதனால பா.ஜ.க. வில் அங்கீகாரம் கிடைக்கலைங்கிறது நிஜமில்லை." என்று கூறியுள்ளார்.