லீமா ரோஸ் 
தமிழ் நாடு

“10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்…” - லீமா ரோஸ்!

Staff Writer

சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிடும் லீமா ரோஸ், “நிச்சயமாக பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெறுவேன்.” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

ஏற்கனவே 23 வேட்பாளர்களை முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 127 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டார். இந்த பட்டியலில் தற்போது பதவி வகித்து வரும் 46 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் அதிமுக வாய்ப்பு வழங்கியுள்ளது. மேலும் மொத்தம் 150 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலில் 17 பெண்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த பெண்களில் லீமா ரோஸ் மார்ட்டின் பெயர் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளது.

சமீபத்தில் இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் லீமா ரோஸ். அவருக்கு தற்போது லால் குடி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளாது. கட்சியில் இணைந்த ஒரே மாதத்தில் அவருக்கு சீட் கொடுக்கப்பட்டு உள்ளது.

லால்குடி தொகுதியில் கிடைத்த சீட் கொடுத்ததற்கு எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி கூறிய லீமா ரோஸ், பத்தாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.” என்று கூறியுள்ளார்.