இதயம் வி.ஆர். முத்து 
தமிழ் நாடு

’இதயம்’ எண்ணெய் உரிமையாளர் வி.ஆர். முத்து மறைவு!

Staff Writer

நாற்பது ஆண்டுகளாக தமிழகத்தில் முன்னணியாக இருந்துவரும் இதயம் பிராண்ட் எண்ணெய் நிறுவன உரிமையாளர் வி.ஆர். முத்து இன்று காலமானார்.  

உடல்நலம் குன்றி சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அவரது உடல் இறுதி மரியாதைக்காக சொந்த ஊரான விருதுநகருக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.