பா.ஜ.க.விலிருந்து விலகிய அண்ணாமலை, 'வீ தி லீடர்ஸ்' எனும் புதிய அரசியல் - சமூக இயக்கத்தை, தனது பிறந்தநாளான ஜூன் 5ஆம் தேதி தொடங்கினார்.
இந்த இயக்கத்தின் முதல் மாநாடு, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 'போதை இல்லாத தமிழ்நாடு' என்ற கருப்பொருளுடன் நேற்று நடைபெற்றது.
நேற்றைய மாநாட்டில் அண்ணாமலை பேசியதில் முக்கிய அம்சங்கள்:
* போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்.
* 'வீ தி லீடர்ஸ்' அமைப்பு விரைவில் அரசியல் கட்சியாக மாறும். 2031 சட்டபேரவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு புதிய அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும்.
* மாவட்டவாரியாக மக்கள் மாநாடுகள், உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடத்தப்படும்.
* இந்த அமைப்பு தொடங்கிய 38 நாள்களில் 19 இலட்சம் பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர்.
* மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்துள்ள இந்த அரசுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.
* தற்போது புதிய அரசில் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் பெரும்பாலானோர் முதல் முறையாக அமைச்சரானவர்கள். அதனால் தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும்; ஒரு நல்ல சமுதாயம் என்பது அவர்கள் தடுமாறும்போது தூக்கிவிட வேண்டும்; கீழே அழுத்தக்கூடாது.
* என்னை இந்து விரோதி என்கிறார்கள். ஜாதி, மதம் ஆகிய அடையாளங்களை வீட்டுக்குள் பூட்டிவைத்துவிட்டுதான் வெளியே வந்துள்ளேன்.” என்று அண்ணாமலை பேசினார்.