திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இன்று (மார்ச் 18) இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையையும் திமுக இறுதி கட்டத்திற்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (CPI) திமுக கூட்டணியில் 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியனும் கையெழுத்திட்டுள்ளனர்.
கடந்த தேர்தலில் இக்கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறை திமுக கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட புதிய கட்சிகள் இணைந்துள்ளதால், இடங்களைப் பகிர்ந்து அளிக்கும் நோக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடம் குறைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.