முதல்வர் விஜய்யின் சுதந்திர தின விழா உரை 
தமிழ் நாடு

லஞ்ச, ஊழலிலிருந்து காப்பதும் சுதந்திரம்தான் - முதல்வர் விஜய் பேச்சு

Staff Writer

தமிழகத்தின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசியக் கொடியை ஏற்றினார்.

சுதந்திர தின விழா உரையில் அவர் பேசியதாவது:

"மக்கள் அனைவரும் ஒன்றிணையும் தருணத்தில்தான் ஜாதி, மதம், இனம், மொழி என அனைத்தும் உடையும். அப்படி உடைந்து நொறுங்கும் இடத்தில் கிடைப்பதுதான் உண்மையான சுதந்திரம்.

தமிழ்நாட்டை லஞ்சம், ஊழலிலிருந்து காப்பதுதான் மிகப்பெரிய விடுதலைக்குச் சமமான விஷயம்தான்; அதை நோக்கிதான் நம் அரசு செயல்பட்டு வருகிறது.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற கோட்பாட்டை அடிப்படையாக கொண்டுதான், தமிழ்நாட்டை லஞ்ச லாவண்யம் அற்ற, போதைப்பொருள் கலாச்சாரம் இல்லாத, பெண்கள் பாதுகாப்பு, சமூகநீதி ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு வெளிப்படையான, உண்மையான, நேர்மையான நிர்வாகமாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

பொதுவாழ்வில் சமரசம் இருக்கவே கூடாது. மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டுதான் த.வெ.க. அரசு செயல்பட்டு வருகிறது. நிர்வாகரீதியாக ஒன்றிய அரசுடன் இணைந்து, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைக் கொண்டுவருகிறோம்.

ஏற்கெனவே செயல்பட்டுவரும் திட்டங்களில் தேவையானவற்றை மேம்படுத்தி, நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

தமிழகத்தை இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாகவும், உலகின் வளர்ந்த நாடுகளுக்கு இடையே 2036ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை 1.5 பில்லியன் டாலராகவும் முன்னேற்றுவோம்." என்று விஜய் பேசினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram