இன்று ஒரு சொல் 
தமிழ் நாடு

இன்று ஒரு சொல் - நத்தம்

Staff Writer

இன்று ஒரு சொல் - நத்தம்

பொருள் விளக்கம் :

1. ஆக்கம். நத்தம்போற் கேடும் (திருக்குறள்)

2. ஊர். (பிங்கல நிகண்டு) வடபுலத்தார் நத்தம்வளர (மதுரை மீனாட்சியம்மை பிள்ளைதமிழ்)

3. ஊரின் குடியிருப்பிடம்

4. கிராமத்தில் மனைநிலம்

5. இடம். (பிங்.)

6. வாழை. (மலைபடுகடாம்)

7. எருக்கு. (மலை.)

8. கடிகார ஊசி

9. சங்கு. (சூடாமணி நிகண்டு)

10. நத்தை. (அகம்பொருள் விளக்க நிகண்டு)

11. இரவு. (பிங்.) அமளிமேவி நத்தநடுவெழுந்து (திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்)

12. இருள். (திவா.)