இன்று ஒரு சொல் - கழகம்
பொருள் விளக்கம்:
1. ஒலக்கம்- வீற்றிருந்தல் - கழகமேறேல் நம்பீ (நாலாயிர திவ்விய பிரபந்தம்)
2. புலவர் கூடிய சபை (திவாகர நிகண்டு)
3. கல்விபயிலும் இடம்- கந்தனை யனையவர் கலைதெரி கழகம் (கம்பராமாயணம்)
4. ஆயுதங்கள், மல்யுத்தம் பயிலும் இடம் (திவாகர நிகண்டு)
5. சூதாடும் இடம் - கழகத்துக் காலை புகின் (திருக்குறள்)
6. சூது - கழகத் தியலும் (புறப்பொருள் வெண்பாமாலை)