இன்று ஒரு சொல் 
தமிழ் நாடு

இன்று ஒரு சொல் - உறவு

Staff Writer

இன்று ஒரு சொல் - உறவு

பொருள் விளக்கம் :

1. உறுகை. யானையோ டாடலுறவு (பழமொழி நானூறு)

2. சுற்றம். உருவே யென்னுறவே யென்னூனே (தேவாரம்)

3. நட்பு. ஒருவேனொடுநீ யுறவாகலையோ (கம்பராமாயணம்)

4. விருப்பம். தலைவனைக்காண வுறவினளாம் (இறையனார் களவி)

5. துறவுக்கு எதிர்நிலை; பிரவிருத்தி. (திவாகர நிகண்டு)