தொழிற்பூங்காக்கள் 
தமிழ் நாடு

ரூ. 238 கோடியில் 8 மாவட்டங்களில் 9 மகளிர் தொழிற்பூங்காக்கள்!

Staff Writer

சட்டப்பேரவையில் குறு, சிறு, நடுத்தர  நிறுவனங்கள் துறைக்கான அறிவிப்புகளை அமைச்சர் பெ. ராஜா வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

1)  செயற்கை நுண்ணறிவு அமைப்புகள், தொழில்துறை சென்சார் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை மேற்கொள்ளும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் வழங்குவதற்காக ரூ. 30 கோடி நிதி ஒதுக்கப்படும்.

2)  தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கியின் மூலம் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், குறு உற்பத்தி நிறுவனங்களுக்கான விளிம்புத் தொகை உதவித் திட்டம் செயல்படுத்தப்படும்.

3)  மகளிர் குறு, சிறு, நடுத்தரத் தொழில்முனைவோர் பயன்பெறும் வகையில் சிட்கோ மூலம் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், திருப்பத்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய 8 மாவட்டங்களில் மகளிர் தொழில்முனைவோர் புதிய தொழில் நிறுவனங்களை நிறுவுவதற்காக 9 தொழிற்பூங்காக்கள் நிறுவ ரூ. 237.56 கோடி ஒதுக்கப்படும்.

4)  சிட்கோ மூலம் திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 2 மாவட்டங்களில்,ரூ. 171.39 கோடி செலவில் 5 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.

5)  1000 புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க ரூ. 9.19 கோடி செலவில் 6 முன்னோடி தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

6 முன்னோடி தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டங்கள்:

1. சுற்றுச்சூழல் பொருளாதாரத் தொழில் நிறுவனங்கள் – 150 தொழில் முனைவோர்

2. தமிழ்நாடு உணவு வாகனத் தொழில் நிறுவனங்கள்– 150 தொழில் முனைவோர்

3. நீலப் பொருளாதாரத் தொழில் நிறுவனங்கள் - 150 தொழில் முனைவோர்

4. சுற்றுலா, விருந்தோம்பல் தொழில் நிறுவனங்கள் – 200 தொழில் முனைவோர்.

5. பண்ணையிலிருந்து சந்தை வரை தொழில் நிறுவனங்கள் – 150 தொழில் முனைவோர் .

6. ஆடை வடிவமைப்பு தொழில் நிறுவனங்கள் - 200 தொழில் முனைவோர்

6)  கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி கிராமத்தில், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், சிட்கோ மூலம் 60.36 ஏக்கரில் ரூ. 48 கோடியில் புதிய மருந்தியல் பூங்கா அமைக்கப்படும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram