இன்ஸ்டாகிராம் பிரபலம் ஹரிஷ் 
தமிழ் நாடு

'மனஉளைச்சல்'... இன்ஸ்டாகிராம் பிரபலம் ஹரிஷ் உருக்கமான வீடியோ வெளியிட்டு தற்கொலை!

Staff Writer

இன்ஸ்டாகிராமில் நிதி ஆலோசனை வழங்கி வந்த ஹரிஷ் என்பவர் தற்கொலை செய்துகொண்டார்.

பைனான்ஸ் வித் ஹரிஷ் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் நிதி ஆலோசனை தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வந்தார் ஹரிஷ். இவருடைய பக்கத்தை 15 இலட்சம் பேர் பின்தொடர்ந்து வந்தனர்.

அண்மையில், யூடியூபர் ஒருவர் இவரைப் பற்றி அவதூறாக வீடியோ ஒன்றை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கமும் மெட்டாவால் முடக்கப்பட்டது. இதனால், கடந்த சில நாள்களாக ஹரிஷ் மிகுந்த மனஉளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை முட்டுக்காட்டில் அவர் தங்கியிருந்த இல்லத்தில் ஹரிஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்னர் உருக்கமான வீடியோ ஒன்றை ஹரிஷ் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அவருடைய தந்தை விநாயகம் கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

புகார் மனுவில், யூடியூபர் ஜேசன் என்பவர் ஹரிஷ் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதால், ஹரிஷ் சைபர் புல்லிங்கிற்கு ஆளானதால் மிகுந்த மனஉளைச்சலுக்கு தள்ளப்பட்டதாகவும், மேலும் அவர் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டதாகவும் ஹரிஷின் தந்தை விநாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக கானாத்தூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram