தமிழ் நாடு

முஸ்லிம் லீக் அமைச்சர் யார்?- விஜய்யிடம் நேரில் கடிதம்

Staff Writer

முதலமைச்சர் விஜய்யை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தனர். 

அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர், தேசியச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நவாஸ் கனி ஆகியோர் அவரிடம் கட்சியின் கடிதம் ஒன்றை வழங்கினர்.

அதில், பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்ஏ.எம்.சாஜஹானை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடனிருந்தார். 

முன்னதாக, முஸ்லிம் லிீக் தலைவர் காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது அமைச்சரவையில் பங்கேற்பதுதானே தவிர, கூட்டணி அல்ல; தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காலையில் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார் என்றும் அமைச்சரவையில் முஸ்லிம் லீகுக்கு இரண்டு இடங்கள் வேண்டும் என ஊடகங்கள் மூலம் கேட்பதாகவும் கூறினார்.