த.வெ.க. தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு தெரிவித்துள்ளது.
மண்ணடியில் உள்ள முஸ்லிம் லீக் கட்சியின் அலுவலகத்துக்கு த.வெ.க. மூத்த நிர்வாகி செங்கோட்டையன், அருண்ராஜ் ஆகியோர் சென்றனர்.
முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீனைச் சந்தித்தனர்.
பின்னர், அவர் த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை வழங்கினார்.
முன்னதாக, நேற்று முஸ்லிம் லீக்கின் ஆதரவு இல்லை என்றும் தி.மு.க.வின் நிலைப்பாடே எங்கள் நிலைப்பாடு என்றும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.