விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி பிளவக்கல் அணை பூங்கா மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் ‘ஏங்க… கூமாபட்டி அணைக்கு வாங்க’ என்ற ரீல்ஸ் வைரலாகி பட்டி தொட்டி எங்கும் பரவியது. அந்த கூமாபட்டி அணைதான் பிளவக்கல் அணை.
இந்த பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டு பணிகள் ரூ10 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனடிப்டையில் இந்த பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பிளவக்கல் அணையில் பூங்கா சுற்றுச் சுவர், நுழைவு வாயில், நடைபாதை, குழந்தைகள் விளையாடும் இடம், உடற்பயிற்சி கூடம், செல்ஃபி பாயிண்ட் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.