கோட்டையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த அரசு ஊழியர் ஜேக்டோஜியோ கூட்டமைப்பின் பிரதிநிதிகள்
கோட்டையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த அரசு ஊழியர் ஜேக்டோஜியோ கூட்டமைப்பின் பிரதிநிதிகள்  
தமிழ் நாடு

முதல்வர் ஸ்டாலினிடம் சென்ற அரசு ஊழியர் ஸ்ட்ரைக் விவகாரம் - கோட்டையில் சந்திப்பு !

Staff Writer

காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்திருந்த அரசு ஊழியர் ஜேக்டோஜியோ கூட்டமைப்பினர் இன்று காலையில் முதலமைச்சர் ஸ்டாலினை தலைமைச்செயலகத்தில் சந்தித்தனர். அவரிடம் நேரடியாக தங்கள் மனுவை அளித்தனர்.  

முன்னதாக, மனிதவள அமைச்சர் தங்கம் தென்னரசின் நேற்றைய அறிக்கையை நிராகரித்து, ஜேக்டோஜியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. 

அதில், “ மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் ஆலோசனையின் அடிப்படையில், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் மூன்று அமைச்சர்கள் இன்று 13.02.2024 நடத்திய பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் வெளியிட்ட பத்திரிகை செய்தியினை ஜாக்டோ ஜியோ முற்றிலுமாக நிராகரிக்கிறது.

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நடத்தவுள்ள வேலைநிறுத்த அறிவிப்பினை, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேசி வாழ்வாதார கோரிக்கைகள் தொடர்பாக அரசின் முடிவினை அறிவிக்க வேண்டும்.” என்று ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர். 

இந்த நிலையில், இன்று காலை அவர்களுக்கு முதலமைச்சரைச் சந்திக்க அழைப்பு வந்தது. அதன்படி அவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினர்.