எச். இராஜா 
தமிழ் நாடு

எச்.இராஜாவுக்கு சிறைத் தண்டனை- 2 வழக்குகளில் தலா ஆறு மாதங்கள்!

Staff Writer

தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.இராஜாவுக்கு இரு வழக்குகளில் தலா ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரியார் சிலை உடைப்பு குறித்து பேசியதோடு, தி.மு.க. எம்.பி. கனிமொழியைக் கடுமையாக விமர்சித்தது தொடர்பான இரு பிரச்னைகளில் எச்.இராஜா மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன.

அவ்விரு வழக்குகளிலும், அவரைக் குற்றவாளியாக உறுதி செய்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

ஒவ்வொரு வழக்கிலும் தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச்.இராஜா, தன்னுடைய சட்ட அணியினர் இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார்கள் என்றும் திராவிடியன் ஸ்டாக்கை எதிர்த்து தன்னுடைய போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.