ஜேம்ஸ் வசந்தன் 
தமிழ் நாடு

தவெகவுக்கு தாவக் காத்திருக்கும் இசை மாமேதை?

Staff Writer

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக திமுகவுக்கு ஜால்ரா அடிப்பதில் அக்கட்சியின் ஐடி விங்கரர்களையே ஓவர்டேக் செய்து வந்த பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தற்போது யுடர்ன் அடித்து விஜய் கட்சிக்கு தாவத் தயாராகி வருவதாக அவரது ஆர்கெஸ்ட்ரா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுப்ரமணியபுரம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஒன் பிலிம் ஒண்டராக வலம் வந்தவர் ஜேம்ஸ் வசந்தன். இவரது டியூன்கள் மேல் நம்பிக்கையில்லாமல் அப்படம் முழுக்க இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தியிருப்பார் இயக்குநர் சசிக்குமார்.

படம் பெரும் ஹிட்டடித்தாலும் ஜேம்ஸ் வசந்தனுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வரவில்லை. அதையடுத்து சமூகவலைதளங்களில் பரபரப்பு ஏற்றத் தொடங்கிய வசந்தன், ‘இளையராஜா எப்படி இசையமைக்க வேண்டும்… அவர் அவ்வளவு நல்ல இசையமைப்பாளரெல்லாம் கிடையாது என்பது போன்ற அறிவுபூர்மான கருத்துகளை வெளியிட்டு ஒலகப்புகழ் அடைந்தார்.

இதற்கிடையில் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பஞ்சாயத்து இழுப்பது, எதிர் வீட்டுக்காரர்களை எகத்தாளம் செய்வது, காரை நோ பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, ‘அய்யோ கண்ணாடியை உடைச்சிட்டாங்க' என்று கதறுவது என்று சோஷியல் மீடியாவில் ஒரு ஹாட் மெட்டீரியலாகவே வலம் வந்தார்.

அதன் தொடர்ச்சியாக அவர் எடுத்த அடுத்த அவதாரம் திமுகவுக்கு குண்டக்க மண்டக்க முட்டுக் கொடுப்பது. தேர்தல் நெருக்கத்தில் தவெக தலைவர் விஜய்யை சகட்டுமேனிக்கு வாரித்தூற்றினார்.

தற்போது அரசியல் தட்பவெப்ப நிலை மாறி விஜய் ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில் பலரையும் போல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக இவருக்கு அறிவாலய ஆதரவும் குறைந்துவிட்டதாம்!.

எனவே சமீப தினங்களாக தனது திமுக ஆதரவு டியூனை மாற்றிக்கொண்டு மெல்ல விஜய் கானங்களை இசைக்கத் துவங்கியுள்ளார். கிறிஸ்தவ நண்பர்கள் சிலர் மூலம் விஜய்க்கு தூதுவிட்டிருக்கும் அவர், ‘ஏற்கனவே தவறாகப் பேசியதற்காக வெளிப்படையாக மன்னிப்புக் கேட்கவும் தயாராக இருக்கிறேன். எப்படியாவது என்னை கட்சியில் சேர்த்துக்கொள்ளச் சொல்லுங்கள்’ என்று மன்றாடிக் காத்திருக்கிறாராம்.

ராகங்கள் தாளங்கள் நூறு

ஜால்ராதான் காப்பாத்தும் பாரு…

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram