ஜான் பாண்டியன் 
தமிழ் நாடு

பொதுத் தொகுதியில் ஜான் பாண்டியன் - எந்த சின்னத்தில் போட்டி?

Staff Writer

அ.தி.மு.க. கூட்டணியில் ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்த முறை முதல் முறையாக பொதுத் தொகுதியான இராஜபாளையத்தில் அக்கட்சி போட்டியிடுகிறது. 

தங்களின் நீண்ட கால விருப்பம் இதன்மூலம் நிறைவேறியிருப்பதாக ஜான் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

ஏற்கெனவே, தேவேந்திர குல வேளாளர்கள் பட்டியல் வெளியேற்றம் குறித்து பேசிவரும் நிலையில் இந்த ஒதுக்கீடு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து கூட்டணி தலைவர்களுடன் பேசி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். 

அ.தி.மு.க.வின் இரட்டை இலை அல்லது பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தில் இவர்  போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.