திருச்சி சிறப்பு முகாம் 
தமிழ் நாடு

இலங்கை அகதியை விருப்பமின்றி நாடுகடத்த நீதிபதி உட்பட எதிர்ப்பு!

Staff Writer

தமிழகத்தில் அடைக்கலமான இலங்கைத் தமிழ் அகதியின் விருப்பத்தை மீறி அவரை நாடுகடத்தக்கூடாது என உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் உட்பட எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். 

அந்தக் கூட்டறிக்கை :

“ இலங்கையில் குடிமக்கள் மீது சிங்கள இராணுவம் வீசிய குண்டுவெடிப்பில் தனது நான்கு வயது மகளை அநியாயமாகப் பலிகொடுத்த சுபாஷ்கரன் என்பவர் தன் துணைவி சசிரேகா, மகன் நிவேதன் ஆகியோருடன் உயிருக்குப் பாதுகாப்புத் தேடி 2011 -ஆம் ஆண்டில் இந்தியாவுக்குத் தப்பி வந்தார். இங்கு வந்த பின் சென்னை எழிலகத்திலுள்ள அகதிகள் மறுவாழ்வுத் துறையில் முறைப்படி பதிவு செய்து கொண்டார்,

"முகாமுக்கு வெளியே வசிக்கும் அகதி" எனும் அங்கீகாரம் முறைப்படி அவருக்குத் வழங்கப்பட்டது .அதன் பின் சென்னையில் நீலாங்கரை மற்றும் கானத்தூர் காவல் நிலையத்திலும் அவர் பதிவு செய்து கொண்டார். தொடர்ந்து உத்தண்டி பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தவர், பிழைப்புக்காக ஒரு நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், ஊபா மற்றும் சில சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் 25/02/2015 அன்று கைது செய்யப்பட்டு ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப் பட்டார். தண்டனைக் காலம் 2022 இல் முடிந்த பிறகு, எவ்வித வழக்கும் நிலுவையில் இல்லாத நிலையில்,

அவர் விடுதலை செய்யப்படாமல், திருச்சி சிறப்பு முகாமில் மீண்டும் அடைக்கப் பட்டார்.

இதற்கிடையில் சுபாஷ்கரனின் மனைவி சசிரேகாவுக்குச் சிறுநீரகம் பழுதுதடைந்து ஒரு சிறுநீரகம் அறுவை சிகிச்சையில் நீக்கப்பட்டு விட்டது. அவரது மகன் நீவேதனுக்கு (வயது 17) இதயத்தில் ஓட்டை இருப்பதால், அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறான். சசிரேகாவின் தாயார் புற்று நோய் மற்றும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இப்படி அடுக்கடுக்கான துன்பங்களால் சுபாஷ்கரனின் குடும்பம் அலைக்கழிக்கப்பட்டு நாசமாகி வருகிறது. தந்தையின் அரவணைப்பு இல்லாமல் மகன் நிவேதன் 12 ஆம் வகுப்பு முடித்து மேற்படிப்புக்காகக் காத்திருக்கிறான்.

2022 முதல் 2026 வரை நான்காண்டுகள் சிறப்பு முகாமில் வதைபட்டு வந்த கையறு நிலையில், சுபாஷ்கரனை அவரது விருப்பத்திற்கு மாறாகக் கட்டாயப்படுத்தி இலங்கைக்கு நாடுகடத்தத் தமிழக அரசு தற்பொழுது உத்தரவிட்டுள்ளது. இது சிறிதும் ஏற்கத்தக்கதல்ல! மேலும் சென்னையில் பல ஆண்டுகளாக வசித்துவரும் சுபாஷ்கரனுக்குத் தற்பொழுது இலங்கையில் எவ்வித உறவும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

2015 ஜனவரிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்து இந்தியாவில் வசிக்க எந்தத் தடையும் இல்லை என ஏற்கெனவே ஒன்றிய அரசு ஆணையிட்டுள்ளது. அதன் அடிப்படையில் பலர் பயனும் பெற்றுள்ளனர்.

2011 - ஆம் ஆண்டே இந்தியாவில் பதிவு செய்த சுபாஷ்கரனைத் தமிழ்நாட்டில் தங்க விடாமல், கட்டாயப்படுத்தி வெளியேற்றுவது அடிப்படையில் மனித உரிமைக்கு எதிரான செயலாகும். மேலும் அவரைச் சிறப்பு முகாமிலிருந்து விடுவித்து, தமிழகத்திலேயே தங்கி நிம்மதியாக வாழ்வதற்கு மனிதநேய அடிப்படையில் தமிழக அரசு மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிரவும், இலங்கைக்கு அவரைக் கட்டாயமாக நாடு கடத்துவதை உடனடியாகத் தடுத்து நிறுத்தித் தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் எனக் கோருகிறோம்.

(திருவாளர்கள்)

அரிபரந்தாமன், மேனாள் நீதிபதி

எஸ். வி.ராஜதுரை, மனித உரிமைச் செயல்பாட்டாளர்

தோழர் தியாகு, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்

கொளத்தூர் மணி, திராவிடர் விடுதலைக் கழகம்

கு.இராமகிருஷ்ணன், தந்தை பெரியார் திராவிடர் கழகம்

அற்புதம் அம்மாள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்

பேரறிவாளன், வழக்கறிஞர்

சுப்புலட்சுமி ஜெகதீசன், மேனாள் தமிழக / ஒன்றிய அமைச்சர்

இரா. அதியமான், ஆதித்தமிழர் பேரவை

திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

வாலாசா வல்லவன், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி

நாகை திருவள்ளுவன், தமிழ்ப்புலிகள் கட்சி

வழ. ஹென்றி திபேன், மக்கள் கண்காணிப்பகம்

ப.பா.மோகன், மூத்த வழக்கறிஞர்

வழ. வாஞ்சிநாதன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

பேரா. த. செயராமன், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்

சுப.உதயகுமார், பச்சைத் தமிழகம் கட்சி

வழ.பாலமுருகன், மக்கள் சிவில் உரிமைக் கழகம்

அறிவுமதி, கவிஞர்

த. சண்முகம், திராவிடர் கழகம்

பேரா. வீ. அரசு, ஆய்வறிஞர்

பேரா. முரளி, பியூசிஎல்

பேரா. பிரபா கல்விமணி, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்

சிவகுமார், பேராசிரியர்

ஆசீர்வாதம், மனிதஉரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு

வழ. பானுமதி, தமிழ்நாடு முற்போக்குப் பெண் வழக்கறிஞர்கள் சங்கம்

வழ. வளர்மதி, பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம்

வழ.கயல் (எ) அங்கயற்கண்ணி, சென்னை உயர்நீதி மன்றம்

மனிதி செல்வி, அனைத்திந்திய புரட்சிகரப் பெண்கள் இயக்கம்

வழ. தமயந்தி, புரட்சிகர விடியல் பெண்கள் மையம்

வழ. திருமலை, சென்னை உயர் நீதி மன்றம்

நிலவழகன், மக்கள் தமிழகம் கட்சி

பாவெல், தமிழக மக்கள் முன்னணி

தங்க குமரவேல், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம்

செந்தில், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

பாலகிருஷ்ணன், சுய ஆட்சி இயக்கம்

மீ.த.பாண்டியன், மக்கள் விடுதலை முன்னணி

கி.வே. பொன்னையன், தற்சார்பு விவசாயிகள் சங்கம்

நேருதாஸ், தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதைக் கழகம்

நிலவன், ஈரோடு மக்கள் இயக்கம்

வழ. தமிழ் இராசேந்திரன், மதுரை உயர் நீதி மன்றம்

வழ. பாவேந்தன், சென்னை உயர் நீதிமன்றம்

வழ. கே. சுப்பிரமணியம், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் (IAL)

வழ. தங்கராசு, சென்னை உயர் நீதி மன்றம்

வழ. செயப்பிரகாசம், புரட்சிகர இளைஞர் முன்னணி

பொதியவெற்பன், ஆய்வறிஞர்

ஜமாலன், எழுத்தாளர்

ஆத்மநாதன், எழுத்தாளர்

முனைவர் மா. பூங்குன்றன், தென்மொழி இதழாசிரியர்

மருதுபாண்டியன், சோசலிச மையம்

சுப்பு மகேசு, தமிழர் உரிமை இயக்கம்

நாகேசுவரன், பெரியார் பேரவை

க.இரா. தமிழரசன், தமிழ்த்தேசக் குடியரசு இயக்கம்

சௌ. சுந்தரமூர்த்தி, தமிழர் விடுதலைக் கழகம்

வழ. ப. குணசேகரன், சாமானிய மக்கள் கட்சி

தெய்வமணி, அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம்

கோப்பெருஞ்சோழன், தமிழ்த்தேசிய மக்கள் விடுதலைக் கழகம்

செந்தீ நாகவரசன், செந்தீ கலைஇலக்கியப் பேரவை

அ. சி. சின்னப்பத் தமிழர், தமிழ்வழிக் கல்வி இயக்கம்

காஞ்சி அமுதன், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு

மங்கையர்ச்செல்வன், தமிழ்மீனவர் விடுதலை வேங்கைகள்

மதியவன் இரும்பொறை, தமிழ்த்தேச மார்க்சியக் கழகம்

இராசு, ஐந்திணை மக்கள் கட்சி

குணசேகரன், தமிழ்த்தேச முன்னேற்றக் கழகம்

இராசேந்திர பிரபு, சமூகநீதிக் கூட்டமைப்பு

வழ. செ. குணசேகரன், தமிழ்நாடு விடுதலைப்புலிகள்

தம்பி மண்டேலா, மக்கள் குடியரசு இயக்கம்

பரிதி, தமிழ் தமிழர் இயக்கம்.”