தமிழ் நாடு

கீழடி அறிக்கையை வெளியிட வேண்டும்- கூட்டறிக்கையில் வலியுறுத்தல்

Staff Writer

தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி அகழ்வாய்வு அறிக்கையை உடனே வெளியிட வேண்டும் என பல்வேறு மக்கள் இயக்கங்கள், எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்களின் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அந்தக் கூட்டறிக்கை விவரம்:

” 2014 - 2016 காலகட்டத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் ( Archeological Survey of India - ASI ) சார்பாகக் கீழடி அகழாய்வு, தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களால் மேற்கொள்ளப் பட்டது. கீழடியில் கிடைக்கப் பெற்ற பொருட்கள் மற்றும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் 982 பக்கங்கள் கொண்ட அறிக்கையினை அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்திற்கு 2023 ஜனவரி மாதத்தில் முறைப்படி சமர்ப்பித்துள்ளார். அறிவியல் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் கீழடியின் காலம் கி.மு.800 - 500 வரை என்பதாக அவர் வரையறுத்துள்ளார்.

ஆனால், போதிய உண்மையான காரணங்களோ, மதிப்புயர் நியாயங்களோ இன்றி அமர்நாத் அவர்கள் சமர்ப்பித்த ஆய்வறிக்கையினை மறுத்து,அவரின் ஆய்வறிக்கையைமேம்படுத்தி அனுப்புமாறு இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அவருக்கே திருப்பி அனுப்பியது. இந்த அறிக்கையை அனுப்பிய இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் உறுப்பினர் குழுவில் உள்ள எவரும் கீழடிக்கு வந்ததே இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் தனக்கு அனுப்பிய அறிக்கை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்ப அடிப்படையில் உருவாக்கப் பட்டதாக அமர்நாத் அவர்கள் தெளிவு படுத்துகிறார்.

பல்வேறு தரவுகளின் அடிப்படையில் கீழடியின் தொன்மையைக் கணித்த அமர்நாத் அவர்களின் காலத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் ஏற்கத் தயாராக இல்லை. அதை மாற்ற வேண்டும் என அது வலியுறுத்துகிறது. இதுதான் இச்சிக்கலின் சாரம்.

ஆனால், எவ்விதப் புறச் செல்வாக்கிற்கும் உள்ளாகாமல், உண்மையான மற்றும் சரியான அறிக்கையைக் கடமை உணர்வோடும் மனச்சாட்சியோடும் சமர்ப்பித்ததாகக் கூறி, தனது ஆய்வறிக்கையை மாற்றி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என அமர்நாத் அவர்கள் திட்டவட்டமாக எழுத்து வடிவில் தெரிவித்து விட்டார். ஆனால் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அறிக்கையைத் திருத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருவதை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

துறைவாரியான கடிதப் போக்குவரத்தோடு இந்த முக்கியமான செய்தி முடங்கி விடுவது ஏற்புடையதல்ல! அமர்நாத் அவர்கள் தனது ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்து மூன்று ஆண்டுகளாகியும் கீழடி ஆய்வறிக்கையை வெளியிடாமல் இருப்பது பெரும் ஐயத்தை உண்டாக்குகிறது. இதனால் உண்மை நிலை என்ன என்பதை அறிய முடியாமலும் இருக்கிறது. எனவே இத்தகைய குழப்பத்தைப் போக்கும் வகையில், அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் கீழடி ஆய்வறிக்கையின் மூலப்பிரதியை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் உடனடியாகப் பொதுவெளியில் வெளியிட்டு, அனைவரின் ஐயத்தையும் போக்க வேண்டும்.

மேலும், அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் நிலைப்பாட்டை ஆதரித்தும், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்லியல் அறம், விதிகள், விழுமியங்களுக்கு எதிராகத் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை ஏற்க மனமின்றிச் செயல்படும் போக்கினைக் கண்டித்தும் முந்தைய மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்திருந்தது.

தமிழகத்தின் தொன்மையை அறிவியல் வழியில் நிறுவும் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட இன்றைய மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் அரசும் உரிய அனைத்து வழிகளிலும் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

கூட்டறிக்கை ஒருங்கிணைப்பு

கண. குறிஞ்சி(தமிழ்நாடு மக்கள் உரிமைப் பேரவை)

--------------------------------------------------------

கூட்டறிக்கையில் கையெழுத்திட்டோர்:

பழ. நெடுமாறன்(உலகத் தமிழர் பேரவை)

அரிபரந்தாமன்(மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி)

எஸ்.வி.ராஜதுரை( மார்க்சிய-பெரியாரிய அறிஞர்).ச.தமிழ்ச்செல்வன்(சாகித்திய அகாதமி விருதாளர்)

தேவி பாரதி(சாகித்திய அகாதமி விருதாளர்)

ஆர்.பாலகிருஷ்ணன்(சிந்து வெளி ஆய்வாளர்)

மதுக்கூர் இராமலிங்கம்(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்)

டிராட்ஸ்கி மருது(ஓவியர்)

களப்பிரன்(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்)

ப.பா.ரமணி(தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்)

கோவன்(மக்கள் கலை இலக்கியக் கழகம்)

பிரளயன்(நாடகவியலாளர்)

ஆழி செந்தில்நாதன்(மொழிச்சமன்மைக்கும் உரிமைகளுக்குமான பரப்பியக்கம்)

சாவித்திரி கண்ணன்( பத்திரிகையாளர்)

அய்யநாதன்(ஊடகவியலாளர்)

கொளத்தூர் மணி(திராவிடர் விடுதலைக் கழகம்)

கு.இராமகிருஷ்ணன்(தந்தை பெரியார் திராவிடர்கழகம்)

தோழர் தியாகு(தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்)

ப.பா. மோகன்(மூத்த வழக்கறிஞர்)

பொழிலன்(தமிழக மக்கள் முன்னணி)

வாலாசா வல்லவன்(மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி)

திருமுருகன் காந்தி(மே 17 இயக்கம்)

கார்முகில்(தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி)

கே.பாலகிருஷ்ணன்(ஐக்கிய விவசாயிகள் முன்னணி - SKM)

ஓவியா(புதிய குரல்)

த.செயராமன்(தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்)

ச.பாலமுருகன்(மக்கள் சிவில் உரிமைக் கழகம்)

பாலன்(தமிழ்நாடு கம்யூனிஸ்டுக் கட்சி - (மா.லெ.மா.)

.மீ.த.பாண்டியன்(தமிழக மக்கள் பண்பாட்டுக்கழகம்)

சுப.உதயகுமாரன்(பச்சைத் தமிழகம்)

வீ.அரசு(பேராசிரியர்)

பேரா. இரா.முரளி(மக்கள் கல்விக் கூட்டியக்கம்)

பேரா.பிரபா கல்விமணி(தாய்த் தமிழ்ப்பள்ளி, திண்டிவனம்)

ப.சிவக்குமார்(பேராசிரியர்)

க.பஞ்சாங்கம்(பேராசிரியர்)

அ.மங்கை(பேராசிரியர்)

நா.மணி(பேராசிரியர்).

கோச்சடை(பேராசிரியர்)

பிரின்சு கஜேந்திர பாபு(பொதுக் கல்விக்கான மாநில மேடை)

சு.மூர்த்தி(கல்வி மேம்பாட்டுக் குழு)

ரெங்கையா முருகன்(வ.உ.சி. அறக்கட்டளை)

திருப்பூர் சிவகாமி(தமிழ்நாடு அறிவியல் மன்றம்)

அறிவுமதி(கவிஞர்)

இந்திரன்(எழுத்தாளர்)

ஆதவன் தீட்சண்யா(எழுத்தாளர்)

பாமரன்(எழுத்தாளர்)

சுப்ரபாரதிமணியன்(எழுத்தாளர்)

அழகிய பெரியவன்(எழுத்தாளர்)

ஜீவசுந்தரி(எழுத்தாளர்)

அப்பண்ணசாமி(எழுத்தாளர்)

குட்டி ரேவதி(எழுத்தாளர்)

கவின்மலர்(எழுத்தாளர்)

சமந்தா(எழுத்தாளர்)

ஜமாலன்(எழுத்தாளர்)

நக்கீரன்(சூழலியல் எழுத்தாளர்)

மோகனரங்கன்(கவிஞர்)

கவிதா பாரதி(திரைக்கலைஞர்)

மு.சுந்தரன்(ஓவியர்)

பொதியவெற்பன்(தமிழியல் ஆய்வறிஞர்)

பொ.வேல்சாமி(ஆய்வறிஞர்)

தமிழ் காமராசன்( ஆய்வாளர்)

ஆர்.ஆர். சீனிவாசன்(ஆவணப்பட இயக்குநர்)

வி.முத்தையா(காக்கைச் சிறகினிலே இதழாசிரியர்)

க.சந்திரசேகரன்(வையம் இதழாசிரியர்)

மா.பூங்குன்றன்(தென்மொழி இதழாசிரியர்)

தங்க .செங்கதிர்(மானுடம் இதழாசிரியர்)

வாஞ்சிநாதன்(வழக்கறிஞர்)

பானுமதி(வழக்கறிஞர்)

ஆத்மநாதன்(வழக்கறிஞர்) '

தமிழ் இராசேந்திரன்(வழக்கறிஞர்)

பாவேந்தன்(வழக்கறிஞர்)

விஜய் தரணிஸ்(வழக்கறிஞர்)

கி.வே. பொன்னையன்(தற்சார்பு விவசாயிகள் சங்கம்)

செந்தில்(இளந்தமிழகம்)

நிலவன்(நீரோடை)

அருள்தாஸ்(மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டணி - NAPM)

சங்கரலிங்கம்(சுயாட்சி இயக்கம்)

அரசெழிலன்(நாளை விடியும் இதழ்)