ஆளுநர் ஆர்.என். ரவி 
தமிழ் நாடு

அச்சச்சோ ஆளுநரை மாத்திட்டாங்களே.. வருத்தப்படும் காங்கிரஸ் எம்.பி.!

Staff Writer

தமிழ்நாட்டு அரசுடன் மோதல் போக்கில் இருந்தஆளுநர் ஆர்.என்.ரவியை திடீரென மேற்கு வங்க மாநிலத்துக்கு மாற்றி இருப்பது பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அவரை மாற்றி இருப்பது மிகுந்த வருத்தம் அளிப்பதாக கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். அவர் பதிவில் கூறி இருப்பதாவது:

”தேர்தல் காலத்தில் மாண்புமிகு ஆளுநர் திரு. ஆர். என். ரவி அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு அவர் ஒரு நட்சத்திரப் பேசசாளர்! தமிழ்நாட்டையும், தமிழ்மக்களின் சாதனைகளையும் தொடர்ந்து  அவமதித்து வந்தவர். திருவள்ளுவருக்கு காவி அடித்துப் பார்த்தவர். ஆளுநர் மாளிகையை பாஜகவின் அதிகாரப்பூர்வமற்ற தமிழ்நாடு தலைமை அலுவலகமாகப் பயன்படுத்தியவர் என்றே அவர் வரலாற்றில் இடம் பெறுவார். பாஜகவிற்கு ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் பணிய மாட்டார்கள் என்பதை மிகத் தாமதமாகப் பாஜக புரிந்துகொண்டுள்ளது. 

மேற்கு வங்க முதலமைச்சர் திருமிகு.மம்தா பானர்ஜி அவர்கள் தன்னை கலந்து ஆலோசிக்காமலே ஆளுநர் ஆர். என் ரவியை நியமித்து விட்டார்கள் என்று சொல்லியிருக்கிறார்.  வருத்தப்படாதீர்கள் மேடம். மாண்புமிகு ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்துள்ள  மிகப்பெரிய பொக்கிஷம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.!

ஆளுநர் அவர்களே தங்கள் சேவைக்கு மனமார்ந்த  நன்றிகள் !