த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் 
தமிழ் நாடு

த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி ஆட்சியர் புகார்!

Staff Writer

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் திருப்புமுனையை அடைந்துள்ளது. 

பாதிக்கபப்ட்ட மாவட்ட ஆட்சியர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளதாக தி இண்டு நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது. 

அதன்பேரில் அருள் விக்னேஷ் மீது பெண்கள் மீதான வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்கு பதிந்துள்ளதாகவும் அந்த நாளேடு தெரிவித்துள்ளது. 

இதுவரை இந்த விவகாரத்தில் ஆட்சியர் மீதான பல்வேறு தரப்பினரின் கேள்விகளுக்கும் இது பதிலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.