கமல்ஹாசன் 
தமிழ் நாடு

17ஆம் தேதி முதல் கமல்ஹாசன் பிரச்சாரம்!

Staff Writer

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் வரும் 17ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்கிறார்.  

முதல் நாளில் சென்னை துறைமுகம், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம்,

மறுநாள் 18ஆம் தேதி சென்னை தியாகராயர் நகர், மயிலாப்பூர், சேப்பாக்க்கம்- திருவல்லிக்கேணி, வேளச்சேரி,

19ஆம் தேதி அன்று அவினாசி, கோவை தெற்கு,

20ஆம் தேதி அன்று திருச்சி கிழக்கு, திருவரங்கம், இலால்குடி ஆகிய பகுதிகளில் கமல் பிரச்சாரம் செய்கிறார்.