மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் 
தமிழ் நாடு

எந்தச் சின்னத்தில் போட்டி?- கமல் கட்சி நாளை அவசர ஆலோசனை!

Staff Writer

சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கோரியுள்ளபடி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது சொந்த சின்னத்தில் போட்டியிடுவதா என்பதை முடிவுசெய்ய கமல் ஹாசனின் ம.நீ.ம. கட்சி நாளை அவசர ஆலோசனை நடத்துகிறது.  

”சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து கலந்தாலோசிக்க, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், அணிகளின் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்களின் அவசரக் கூட்டம், தலைவர் கமல் ஹாசன் அவர்களின் தலைமையில் நாளை 20.03.2026(வெள்ளிக்கிழமை), மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது.

சென்னையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், அணிகளின் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நேரம் : மாலை 5 மணி

இடம் : ஹோட்டல் சாம்கோ,

5வது வீதி, A J பிளாக்,

அண்ணா நகர், சென்னை” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர்  அருணாச்சலம் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.