மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார். அங்குள்ள கலைஞர் உலகம் அருங்காட்சியத்தை சுமார் ஒரு மணி நேரம் சுற்றிப் பார்த்தார். கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் உட்பட பலரும் உடனிருந்தனர்.