கனிமொழி எம்.பி. 
தமிழ் நாடு

சிறுவன் சாவுக்கு நீதி கேட்டால் போலீஸ் அடக்குமுறை- கனிமொழி கண்டனம்

Staff Writer

பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடும் அவரின் உறவினர்கள், பொதுமக்கள் மீது காவல்துறையை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது த.வெ.க. அரசு என்று தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி சாடியுள்ளார்.  

”உடற்கூறு ஆய்வில் அம்மாணவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், குற்றத்தை விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறை, நீதி கேட்கும் மக்களை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது.

குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கிவிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையே ஒடுக்கும் கேடுகெட்ட ஆட்சியாக இந்த தவெக ஆட்சி உள்ளது.” என்று கனிமொழிதன் சமூக ஊடகப் பதிவில் கூறியுள்ளார்.